p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Tuesday, July 13, 2004

தமிழரின் சந்ததிக்கு!

சிறுவர்களே! சிறுமியரே!
நாளைய புலம் பெயர்ந்த
தமிழரின் சந்ததியே!

பொறுமையாக வாழுங்கள்!
தேவைக்குப் பொங்கிடுங்கள்!
பகைமையை மறவுங்கள்!
பகமைக்காய் வருந்துங்கள்!
சுகந்திரமாய்த் திரியுங்கள்! பிறர்
சுகந்திரத்தைக் கெடுக்காதீர்!
பெரியோரை மதியுங்கள்! வெறும்
பெருமைக்காய் வெள்ளையராய் விளங்காதீர்!
ஒருமையாய் இருங்கள்! வெற்று
உடம்பிற்காய் உங்களிடை
உதைபட்டுக் கொள்ளாதீர்!
அடிபாடு இதற்கெல்லாம் அவசியமா?
தெருத்தெருவாய் சொறிநாயாய்(க்)
கடிபட்டுக் கொள்ளாதீர்!
உழைப்பின்றி ஊதனத்தைத் தேடாதீர்! கடும்
உழைப்பின்றிக் கிடைப்பதெல்லாம்
உரமாக்கிக் கொள்ளாதீர்!

அடிவானில் விடிவெள்ளி தெரிந்திடும் அங்கே
கதிரவனாய் உம்மெழிற்சி உலகிற்குப் புரிந்திடும்.




Sunday, July 11, 2004

கருநிறப்பொட்டு

இறுக்கம் இருந்திட்ட எம்முள் - சிறு
இழையாய் ஓடிடும் கருநிறப் பொட்டு
பொறுக்க வில்லையோ சிலருக்கு - தீயை(ப்)
பூகம்பமாக்கத்துடிப்பவர் எவரோ?
அறுத்து எறியுங்கள் களையை - இல்லை
அடுக்கடுக் காகவே அதுகொல்லும் பயிரை
மறுக்க முடியாத உண்மை - எமை
மண்ணோடு மண்ணாக்கத் துடிக்குது பகமை

கண்ணியம் நிறைந்தவர் தமிழர் - எங்கள்
கடமையை மறந்துமே கயவர்கால் வீழ்வதோ?
பொன்பொருள் வேண்டுமா எடுத்திடு - இல்லை
போதாது என்றால் என்னுயிரையும் பறித்திடு
செந்நியைக் கொய்துநான் தருகின்றேன் - எந்தன்
தேகத்து உறுப்பெல்லாம் அறுத்துமே கொடுக்கின்றேன்
அந்நியர் கால்களை விட்டிடு - அவர்
ஆதிக்கம் எம்மண்ணில் வருவதை நிறுத்திடு

அந்நியர் எம்முள்ளே புகுகின்றார் - இவர்
அநியாயம் செய்திட எம்மையே தூண்டிறார்
உன்னினம் கொன்றுநீ வாழ்வதா? - இல்லை
உறுதியாய் இருந்துமே தமிழினைக் காப்பதா?
இந்நிலைதனில் நாங்கள் பிரிவதா? - இதை
இழிநிலை என்றுநீ தூற்றடா துரத்தடா
இன்னுமா தமிழுக்குச் சங்கடம் - அந்த
இருளினை அகற்றிடச் சங்கினை முழங்கடா!

அரசியல்

சண்டை பிடிக்கின்றார் சிலபேர் - அதை(ச்)
சாட்டாக வைத்துப் பிழைப்பவர் பலபேர்
பண்டை அரசர்களின் நல்லாட்சி - இன்று
பாழாய்ப் போனது சோசலீச ஆட்சி
தொண்டர் தொகுதியென உரைப்பர் - பின்
தொல்லை இவர்களென தூரேனின்று குரைப்பர்
உண்டுகழித்து வளர்பார் ஊனம் - பின்னர்
உலகை வழிநடத்த இவர்க்கெங்கே நேரம்?

நித்தம் உரைப்பது சமாதானம் - ஆனால்
நினைவில் இருப்பதுவோ ஆட்சிப்பீடம்
தத்தம் பதவிகளைக் காப்பதற்காய் - பலர்
தாவிக்குதிக்கின்றார் மந்திகள் போல்
புத்தன் உரைத்தவைகள் புனிதமொழி - அரசின்
புன்னகையில்த் தெரிவதுவோ சமய வெறி
முத்தம் தருகின்றோம் குழந்தைகளாய் - அதை
முறையாக எடுப்பதுதான் மனித குணம்

பெருமையாய் வருகின்றார் தமிழரின்று - அவர்
பேச்சினை முறிக்கின்றீர் இதுவா நன்று
வெறுமை உடலுமீற்றில் உலாப்போகும் - அது
விழித்து இருக்கையில் நீர் உலவவிடும்
அருமை யானதுதான் சமாதானம் - அதை
அவமதிப்பதால் வேண்டாம் யுத்த காண்டம்
பொறுமை போதுமினிப் புறப்படுங்கள் - தமிழர்
பொறுமை யிழக்க முன்னர் வழிகொடுங்கள்.


Thursday, July 08, 2004

நன்றி

சென்றவுயிர் வந்ததடி நின்னைக்கண்டு

சோர்ந்தநெஞ்சு துடிக்குதடி உன்னாலின்று

குன்றாக இருந்தநானும் சிகரமானேன்

குங்குமமே உன்னால்நானும் சிவந்தேபோனேன்

வென்றேனெந்தன் சோகமெல்லாம் உந்தனாலே

வேதனைகள் களைந்துநின்றேன் உன்னால்தானே

நன்றிநான் சொல்லுகின்றேன் அந்தநாட்கு

நமைச்சேர்த்த நாளதுவே நன்றிநன்றி!
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது