p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Sunday, July 11, 2004

கருநிறப்பொட்டு

இறுக்கம் இருந்திட்ட எம்முள் - சிறு
இழையாய் ஓடிடும் கருநிறப் பொட்டு
பொறுக்க வில்லையோ சிலருக்கு - தீயை(ப்)
பூகம்பமாக்கத்துடிப்பவர் எவரோ?
அறுத்து எறியுங்கள் களையை - இல்லை
அடுக்கடுக் காகவே அதுகொல்லும் பயிரை
மறுக்க முடியாத உண்மை - எமை
மண்ணோடு மண்ணாக்கத் துடிக்குது பகமை

கண்ணியம் நிறைந்தவர் தமிழர் - எங்கள்
கடமையை மறந்துமே கயவர்கால் வீழ்வதோ?
பொன்பொருள் வேண்டுமா எடுத்திடு - இல்லை
போதாது என்றால் என்னுயிரையும் பறித்திடு
செந்நியைக் கொய்துநான் தருகின்றேன் - எந்தன்
தேகத்து உறுப்பெல்லாம் அறுத்துமே கொடுக்கின்றேன்
அந்நியர் கால்களை விட்டிடு - அவர்
ஆதிக்கம் எம்மண்ணில் வருவதை நிறுத்திடு

அந்நியர் எம்முள்ளே புகுகின்றார் - இவர்
அநியாயம் செய்திட எம்மையே தூண்டிறார்
உன்னினம் கொன்றுநீ வாழ்வதா? - இல்லை
உறுதியாய் இருந்துமே தமிழினைக் காப்பதா?
இந்நிலைதனில் நாங்கள் பிரிவதா? - இதை
இழிநிலை என்றுநீ தூற்றடா துரத்தடா
இன்னுமா தமிழுக்குச் சங்கடம் - அந்த
இருளினை அகற்றிடச் சங்கினை முழங்கடா!

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது