p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Sunday, July 11, 2004

அரசியல்

சண்டை பிடிக்கின்றார் சிலபேர் - அதை(ச்)
சாட்டாக வைத்துப் பிழைப்பவர் பலபேர்
பண்டை அரசர்களின் நல்லாட்சி - இன்று
பாழாய்ப் போனது சோசலீச ஆட்சி
தொண்டர் தொகுதியென உரைப்பர் - பின்
தொல்லை இவர்களென தூரேனின்று குரைப்பர்
உண்டுகழித்து வளர்பார் ஊனம் - பின்னர்
உலகை வழிநடத்த இவர்க்கெங்கே நேரம்?

நித்தம் உரைப்பது சமாதானம் - ஆனால்
நினைவில் இருப்பதுவோ ஆட்சிப்பீடம்
தத்தம் பதவிகளைக் காப்பதற்காய் - பலர்
தாவிக்குதிக்கின்றார் மந்திகள் போல்
புத்தன் உரைத்தவைகள் புனிதமொழி - அரசின்
புன்னகையில்த் தெரிவதுவோ சமய வெறி
முத்தம் தருகின்றோம் குழந்தைகளாய் - அதை
முறையாக எடுப்பதுதான் மனித குணம்

பெருமையாய் வருகின்றார் தமிழரின்று - அவர்
பேச்சினை முறிக்கின்றீர் இதுவா நன்று
வெறுமை உடலுமீற்றில் உலாப்போகும் - அது
விழித்து இருக்கையில் நீர் உலவவிடும்
அருமை யானதுதான் சமாதானம் - அதை
அவமதிப்பதால் வேண்டாம் யுத்த காண்டம்
பொறுமை போதுமினிப் புறப்படுங்கள் - தமிழர்
பொறுமை யிழக்க முன்னர் வழிகொடுங்கள்.


0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது