p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Thursday, March 31, 2005

களஞ்சியம்

அள்ளிடும் அட்சர பாத்திரமோ? - இல்லை
ஆயிரம் ஆயிரம் கிரகணமோ?
துள்ளிக் குதித்திடும் மீனினமோ? - இல்லை
தூய சமூத்திர அலையடிப்போ?

மின்மினிப் பூச்சியின் கண்சிமிட்டோ? - இல்லை
மேனகை புரிந்திடும் நடனமிதோ?
கன்னித்தமிழ்ச் சொற்களஞ்சியமே! - என்றும்
கற்றவர் போற்றிடும் தமிழ்மொழியே!

Thursday, March 17, 2005

இருளல்ல

மேகத்தை உரசிய காற்றாய் அவள்கரம்

மெல்ல அவனது மேனியைத் தழுவிற்று

தாகத்தை தீர்த்திட பொழிந்திட்ட மழையென

தையளின் முத்தங்கள் பதிந்தன உதட்டிலே

வேகத்தைத் தாங்காது கொடியொன்று அசைவதாய்

கோதையும் அவனது பிடியிலே அசைந்தனள்

காகத்தின் நிறத்திலே காரிருள் இருப்பினும்

காதலர் அவர்கட்கு இருளன்று; வெளிச்சமே!

நிர் - வாணம்

ஆகாயம் தன்னை
அலங்கரிக்க வைத்துள்ள
நட்சத்திரங்கள்,

ஆட்சிபுரியும் ஆடவன்
சூரியனைக் கண்டதும்
வெட்கம் கொள்ளும்,

பாவம் வானம்;
நிர்வாண உடலில்
ஒட்டியுள்ள திலகமாய்
ஞாயிற்றின் ஒளி.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது