p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Sunday, February 20, 2005

புறத்தே தள்ளு

போராடும் தமிழினமே போராடு தமிழ் க்
கோடரிக் காம்புகளை எதிர்த்தே நில்லு
ஊராரின் பணத்தினிலே வாழ எண்ணும் இந்த
எளியோரை எதிர்த்துமே நீ போராடு
சீரோடும் சிறப்போடும் வாழ்வதற்காய் ஈழம்
சிந்திடும் குருதிதன்னை எண்ணாமலே
தீராத ஆசையுடன் திருடும் இந்தத்
திருடர்களை எதிர்த்துமே நீ போராடு

கண்ணியமாய் வாழ்வோரின் கடமைதன்னைக்
கலைத்திட நினைப்போரைச் சாய்த்திடவும்
மண்ணெல்லாம் நல்ல தமிழ் பரவிடவும் தமிழ்
மாசற்ற இனமொன்றைப் பெறுவதற்கும்
உண்ணியாய் இருந்திடும் ஊனத்தன்மை
உலகைவிட்டுப் போக்கிடவும் பொசுக்கிடவும்
எண்ணமொன்றை உன்நெஞ்சில் பொறித்து வைத்து
என்றென்றும் எதிர்த்து நின்று போராடு

பெண்ணிற்காய் அடிபட்டார் கொலைகள் செய்தார்
பெரியவன் யார் என்பதற்காய் மோதிக்கொண்டார்
தன்னினத்தைப் பயமுறுத்தி உழைக்காமல்
தன்னைமட்டும் வளர்ப்பதையே பெருமை எனறார்
அந்நியத்தை எதிர்த்து நிற்கும் வீரர் அங்கே
ஆலமர விருட்சமாகப் பெருமை சேர்க்க(ப்)
புண்ணியங்கள் இவையனைத்தும் பொசுக்குதற்காய்(ப்)
புகுந்திட்ட கூட்டத்தை நீ புறத்தே தள்ளு.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது