p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Monday, December 27, 2004

நீ அழித்திடும் கடலோ?

தமிழரின் மூத்த குடியை அன்று
குமரியில் மென்ற கடலே இன்னும்
உமிழ்கின்றாய் உந்தன் அலையை மீண்டும்
உலுக்கின்றாய் எங்கள் உயிரை நீ
தமிழினில் கொண்ட அன்போ இல்லை
தமிழினை உண்ட தெண்போ எங்கும்
அமிழ்த்திடபொங்குகின்றாய் நீ
அழித்திடும் கடலோ சொல்லு?

உயிரினம் பலது உன்னைப் பெரும்
உறைவிட மாக்கி வாழ நீ
உயிர்களைக் கொல்லும் அலையைப் பூத
உருக்கொண்டு பெருக்கியதேனோ மனிதப்
பயிர்களைக் கொன்றுதானோ உந்தன்
பசிதனைப் போக்கல் வேண்டும்? இந்த
உயிர்களைப் படைத்த இறையே! உனது
விழிகள்தான் குருடோ சொல்லு?

2 Comments:

  • At 12:01 PM, Anonymous Anonymous said…

    http://www.thamizmanam.com/tamilblogs/readers.php
    தமிழ்மணம் தளத்திற்கு சுட்டி கொடுத்து உங்கள் தளத்தினை பதிவு செய்து விடுங்கள்.

    பரணீதரன்
    http://blog.baranee.net

     
  • At 5:04 PM, Blogger சுந்தரம்பிள்ளை திருப்பரங்குன்றன் SUNTHARAMPILLAI THIRUPPARANKUNRAN said…

    நன்றி தங்கள் கருத்திற்கு. தமிழ் மணக்கும் தளத்துடன் என்னையும் இணைத்துக் கொண்டேன். நன்றி. - குன்றன் -

     

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது