p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

குன்றனின் தமிழ்க் கவிதைகள்

Kunran's Tamil Poems

Thursday, August 05, 2004

பாரதி

இந்திய நாடுமிக்க இழிநிலை அடைந்தபோது
வந்தவன் வீரம்மிக்க பாரதி சுதந்திரத் தீ(ப்)
பந்தினை ஏந்திநின்று பலருமே வியக்கும் வண்ணம்
சிந்துகள் பாடிச்சென்ற சிறந்தவோர் கவிஞனாவான்

இந்திய மக்களேதும் இலட்சிய மின்றிவாழ்ந்த
விந்தையைக் கண்டுவுள்ளம் வேதனை யடைந்தஞானி
சந்ததம் தமிழுக்காக தன்னையே தந்ததூயன்
எந்தையாம் பாரதிக்கு இணையில்லை யாருமென்போம்

தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலைத் தவறிக்கேட்டு
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம்தன்னை
வாழ்விக்க வந்ததூயன் வண்தமிழ்ப் பாரதிதான்
ஆழ்துயர் தனிலேவாழ்ந்த அன்னையாம் தமிழை(ப்)

பாரெலாம் போற்றவைத்த பாவலன் இவனேயாவான்
சீரெலாம் புகழும்வண்ணம் தேசத்தின் சிறுமைகண்டு
கூரியபேனா கொண்டு குறிக்கோளை எடுத்துச்சொன்ன
வீரனை சுப்பிரமணிய வேந்தனைப் போற்றுவோமே!

2 Comments:

  • At 1:12 PM, Blogger Balaji-Paari said…

    நன்றிகள் இந்த நல்ல கவிதைக்கு.

     
  • At 9:02 AM, Anonymous Anonymous said…

    நல்ல கவிதைகள் பல தங்கள் பக்கத்தில் காண முடிகிறது. வாழ்த்துக்கள்

     

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது