நிலை தளர்ந்தேன்
பருகிட இனிக்கும் பழரசமே
என்னோடு இணைந்த இருதயமே
ஈடில்லையே உனக்கு இணையில்லையே
கரைந்தோடும் வெள்ளைப் பனிநானே
கண்டுன்னை அள்ள அலையானேன்
இரைக்கெங்கும் சின்னக் கிளியானேன்
இடர்கொண்டேன் என்னுள் உனைக்கண்டேன்
தென்றலாய் வந்திடும் தேவதை நீ
தேர்ந்திட்ட அழகின் சாதனை நீ
உன்னெழில் பூத்திட்ட தாமரைகள்
உடற்சுளைகள் எல்லாம் தேன்வதைகள்
வெற்றிட மானது பூமியெங்கும்
விண்நோக்கிப் போகுது மழைத்துளிகள்
நிற்குது நிலையாகக் கோள்கள்எல்லாம்
நிலைதளர்ந்தேன் உன்னால் எனைமறந்தேன்